மதுரை நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்க - ஸ்மார்ட் நுண்ணறிவு போக்குவரத்து மேலாண்மை திட்டம் : தனியார் நிறுவனங்கள் ஆய்வு

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை நகரின் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காணும் வகையில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் ஸ்மார்ட் நுண்ணறிவு போக்குவரத்து மேலாண்மை திட்டத்தைச் செயல்படுத்த இரு தனியார் நிறுவனங்கள் ஆய்வை தொடங்கியிருக்கின்றன.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் கா.ப.கார்த்திகேயன் கூறியதாவது: மீனாட்சியம்மன் கோயிலை மையமாகக் கொண்ட பாரம்பரிய ஆன்மிக நகரான மதுரையின் தற்போதைய போக்கு வரத்து, வாகன எண்ணிக்கைக்கு ஏற்ப சாலைகளை விரிவுபடுத்த முடியவில்லை. அதுவே நகர் வளர்ச்சிக்கும், போக்குவரத்து நெரிசலுக்கும் சிக்கலாக உள்ளது. அதனால், வாக னங்களை நினைத்த இடத்தில் நிறுத்தி போக்குவரத்தைத் தடை செய்யாமல் இருக்க பார்க்கிங் பகுதிகளை முறைப்படுத்துவது, கூடுதல் மல்டி லெவல் பார்க்கிங் வசதிகளை அமைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் ஸ்மார்ட் நுண்ணறிவு போக்குவரத்து மேலாண்மைத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.

அவசர சேவைகளுக்கு ஆம்புலன்ஸ்களை உடனடியாக அழைப்பது, விதிமீறும் வாக னங்களை கேமரா மூலம் கண்காணிப்பது, வேகக் கட்டுப் பாடு விதிப்பது, நடைபாதை அமைப்பது, போக்குவரத்து அதிகமுள்ள சாலைகளை கண் காணிப்பது, போக்குவரத்து ஒழுங்குபடுத்துவதை டிஜிட்டல் மயமாக்குவது போன்றவை இந்த திட்டத்தில் இடம்பெறுகின்றன.

வணிக நிறுவனங்கள் அதி கம் உள்ள மாசி வீதிகளில் வாகனங்கள் பார்க்கிங் செய்வது முறைப்படுத்தப்படும்.

இதுதொடர்பாக ஆட்சியர் அனீஸ்சேகர், மாநகராட்சி ஆணையர், போக்குவரத்து போலீஸார் இணைந்து லாரி, பஸ் உரிமையாளர் உள்ளிட்டோரிடம் ஆலோசனை மேற்கொள்வோம்.

ஸ்மார்ட் நுண்ணறிவு போக் குவரத்து மேலாண்மை திட்டம் உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட இருக்கிறது. இதற்காக ஆய்வு மேற்கொள்ளும் டாடா கன்சல்டன்சி மற்றும் அர்பன் டிரான்சிட் கம்பெனி சிஸ்டம் லிட். நிறுவனங்கள் அறிக்கை வழங்கிய பிறகு நிதி ஒதுக்கீடு பெற்று இப்புதிய திட்டம் மது ரையில் செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்