மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் :

By செய்திப்பிரிவு

திருச்சி மாநகராட்சி 30-வது வார்டு மேல கல்கண்டார்கோட்டை வார்டு அலுவலகம் முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

30-வது வார்டு ராஜீவ் காந்தி நகரில் குடியிருப்புகளுக்கு மிக அருகில் கல்லறை தோட்டம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதை மாநகராட்சி நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும். ராஜீவ் காந்தி நகரின் பின்புறம் விளை நிலத்தில் கட்டப்பட்டுள்ள 9 அடி தடுப்புச் சுவரை அப்புறப்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொன்மலை பகுதிச் செயலாளர் கார்த்திகேயன் தலைமை வகித்தார்.

மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சம்பத், பகுதிச் செயலாளர்கள் முத்துக்குமார், மணிமாறன், சீனிவாசன், இந்திய மாணவர் சங்க மாநகர் மாவட்டச் செயலாளர் மோகன்குமார் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்