திருநெல்வேலி விதை ஆய்வு துணை இயக்குநர் ரா. ராஜ்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட விதை விற்பனையாளர்கள், விதைகள் விற்பனை செய்வதற்கு விதை ஆய்வு துணை இயக்குநரிடம் இருந்து உரிமம் பெற்றிருக்க வேண்டும். உரிமம் இல்லாமல் அல்லது காலாவதியான உரிமத்துடன் விதை விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும்.
விதைகளை உரம் மற்றும் பூச்சி மருந்துடன் சேர்த்து வைக்காமல் தனியாக வைத்திருக்க வேண்டும். விவசாயிகள் சான்று அட்டை பொருத்தப்பட்ட விதை ரகங்களை பார்த்து வாங்கி பயன்படுத்த வேண்டும். உற்பத்தியாளர் அட்டையுடன், விதைச்சான்று துறையினரால் சான்றொப்பமிட்ட நீலம் அல்லது வெள்ளைநிற அட்டை ஆகியவற்றுடன் கூடிய விதை மூட்டைகளை வாங்கி பயன்படுத்த வேண்டும்.
தனியார் நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் உண்மைநிலை விதைகள் அனைத்தையும் கோவை விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இயக்குநர் அலுவலகத்தில் பதிவு செய்து, பதிவு எண் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தனியார் விதை விற்பனை நிலையங்களில் விதைகளை வாங்கும்போது ரசீதை கேட்டு வாங்க வேண்டும். விற்பனை ரசீதில் குவியல் எண், காலாவதி நாள் எழுதப்பட்டுள்ளதா என்பதை கவனித்து வாங்க வேண்டும்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago