நெல்லையில் தாமிரபரணி வெள்ளத்தில் சேதமடைந்த - குறுக்குத்துறை மண்டப கல் பாலம் சீரமைக்கப்படுமா? :

By செய்திப்பிரிவு

திருநெல்வேலியில் சமீபத்தில் தாமிரபரணியில் ஏற்பட்ட வெள்ள த்தில் சேதமடைந்த குறுக்குத்துறை கல் பாலத்தை சீரமைக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றங்கரையில் புராதன பழமை வாய்ந்த கல்மண்டபங்கள் அதிகமு ள்ளன. பழங்காலத்தில் அன்னதான மண்டபங்களாக இருந்த இவை, பிற்காலத்தில் பரிகார பூஜை செய்யும் மண்டபங்களாக மாற்றப் பட்டு விட்டன. குறிப்பாக குறுக்குத்துறை பகுதியில் ஆற்றுக்கு நடுவே கல்மண்டபங்கள் இருக்கின்றன. ஆற்றை கடந்து இந்த மண்டபங்களுக்கு செல்வதற்காக கல் பாலங்கள் மிகவும் நேர்த்தியாக அமைக்கப்பட்டிருக்கின்றன. பெரு வெள்ளத்தையும் தாக்குப்பிடிக்கும் அளவுக்கு இந்த பாலங்கள் உறுதி தன்மையுடன் விளங்கிவந்தன. இந்த பாலங்கள் வழியாக கடந்து சென்று மண்டபம் அமைந்துள்ள பகுதிகளில் ஆயிரக்கணக்கானோர் குளிப்பது வழக்கம்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்குமுன் தாமிர பரணி ஆற்றில் ஏற்பட்ட பெருவெள்ள த்தில் குறுக்குத்துறை பகுதியில் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு பின்புறம் உள்ள கல் பாலம் சேதமடைந்துவிட்டது. இதனால் ஆற்றின் நடுவேயுள்ள மண்டபத் துக்கு பரிகார பூஜைக்காகவும், குளிக்கவும் மக்கள் செல்ல முடியவில்லை.

கடந்த சில மாதங்களுக்குமுன் ஆற்றங்கரையில் தூய்மை பணியை மேற்கொள்ள கொண்டு வரப்பட்ட ஜேசிபி இயந்திரத்தால் பாலம் சிறிதளவுக்கு சேதமடைந்திருந்த நிலையில், பெருவெள்ளத்துக்கு தாக்குப்பிடிக்காமல் பாலத்திலி ருந்த தூண்கள் சரிந்து விழுந்து சேதமடைந்துள்ளதாகவும் இப்பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். சிறப்புமிக்க இந்த பாலத்தை சீரமைக்க திருநெல்வேலி மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்