கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி - மண்ணெண்ணெய் பாட்டிலுடன் ஆட்சியர் அலுவலகம் வந்த பெண் :

By செய்திப்பிரிவு

கணவருடன் சேர்த்து வைக்க கோரி இரு குழந்தைகள் மற்றும் மண்ணெண்ணெய் பாட்டிலுடன் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்தவர் இந்துமதி (22). அம்பாசமுத்திரம் இந்து ஆரம்பப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக உள்ளார். இவருக்கு திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளனர். தற்போது கணவரை பிரிந்து தனது தாயுடன் வசித்து வருகிறார். தனது கணவருடன் சேர்த்து வைக்க கோரி காவல் நிலையத்திலும், போலீஸ் அதிகாரிகளுக்கும் மனுக்கள் அனுப்பியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் தனது இரு பிள்ளைகளுடன் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க இந்துமதி வந்தார். மேலும் மண்ணெண்ணெய் பாட்டிலையும் வைத்திருந்தார். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் மண்ணெ ண்ணெய் பாட்டிலை பறிமுதல் செய்து, அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, தனது கணவரை சேர்த்து வைக்குமாறு அவர் கண்ணீர்மல்க தெரிவித்தார். பின்னர் அவர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்