தி.மலை எம்எல்ஏ அலுவலகம் திறப்பு :

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை முத்து விநாயகர் கோயில் தெருவில் சீரமைக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

முன்னாள் எம்பி வேணு கோபால் தலைமை வகித்தார். சீரமைக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தை பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங் கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “தி.மலை சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் நூலகம் செயல்படுகிறது. மாணவர்கள், மகளிர் பயன்பெறும் வகையில் இலவச கணினி மற்றும் தையல் பயிற்சி அளிக்கப்படுகிறது. மாண வர்களுக்கு இலவசமாக ஜெராக்ஸ் போட்டு தரப்படுகிறது. மேலும், இந்தாண்டு ஐஏஎஸ் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை இளைஞர்கள் நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். திருவண்ணாமலை புறவழிச் சாலையில் புதிய பேருந்து நிலையம் அமைத்திட அமைச்சர் நேருவிடம் பேசி உள்ளேன்” என்றார்.

இதில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கிரி, சரவணன், அம்பேத் குமார், ஜோதி, முன்னாள் நகராட்சித் தலைவர் தரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்