மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர சிறப்பு மருத்துவ முகாம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தினர் கோரிக்கை மனு ்அளித்துள்ளனர்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலூர் மாற்றுத்திறனாளிகள் நல சங்கத்தின் சார்பில் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவில், ‘‘வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் முதல் செவ்வாய்க்கிழமை அன்று மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்று வந்தது. இதனால், அனைவரும் பயன்பெற்று வந்தனர்.
இந்த முகாம் கடந்த 5 மாதங்களாக நடைபெறாததால் நலத்திட்ட உதவிகளை பெற முடியாமல் உள்ளனர். அதேபோல், மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்று வந்த மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்வு முகாம் கடந்த 18 மாதங்களாக நடைபெறாமல் உள்ளது. எனவே, விரைவில் மருத்துவ முகாம் மற்றும் குறைதீர்வு கூட்டம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், பார்வையற்ற மாற்றுத்திறனாளி களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க விசாரணை முடிந்து 12 மாதங்கள் ஆகியும் பட்டா வழங்கப்படாமல் உள்ளது.
இந்தப் பிரச்சினையில், மாவட்ட ஆட்சியர் தனிக்கவனம் செலுத்தி வரும் ஆகஸ்ட் 15-ம்தேதி நடைபெற உள்ள சுதந்திர தின விழாவில் பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’’ என்று தெரிவித் துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago