ஜெயலலிதா பல்கலைக்கழகம் அண்ணா மலை பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தார்.
இதனை கண்டித்தும், தமிழக அரசை கண்டித்தும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் நேற்று விழுப்புரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் சி.வி.சண்முகம் பேசியது:
கல்வியில் மிகவும் பின்தங்கிய விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட மாணவர்களின் நலன் கருதி கடந்த 25.02.2021-ல் ஆளுநரின் ஒப்புதல் பெறப்பட்டது. அடுத்த நாள் 26-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. அன்றே துணை வேந்தர் நியமிக்கப்பட்டு, ஜெயலலிதா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. இதனை தொடர்ந்து பல்கலைக்கழக கட்டு மானப் பணிகளுக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்குள்தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்குவந்ததால் பணிகளை செய்ய இயலவில்லை. எந்த ஒரு திட்டமும் அறிவிக்கப்பட்ட உடன் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு, பின் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெறும். உதாரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரிக்கப்பட்டு, தற்காலிக இடத்தில் ஆட்சியர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. தற்போது கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
3,500 பேர் மீது வழக்கு
விழுப்புரத்தில் ஊரடங்கு தடையை மீறி அனுமதியின்றி கூட்டம் கூடி ஆர்ப்பாட்டம் நடத்திய அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் சி.வி சண்முகம், ப.மோகன்உள்ளிட்ட 3,500 அதிமுகவினர் மீது 6 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதா பல் கலைக் கழகத்துக்கு செலவழிக்க நிதி இல்லை என்று சொல்லும் திமுக அரசு, மதுரையில் கருணாநிதிபெயரில் நூலகம் அமைக்க ரூ. 200 கோடிஎப்படி ஒதுக்கியது. இவர்களுக்கு ஜெயலலிதா என்ற பெயர் பிடிக்க வில்லை.ஜெயலலிதா பெயர்தான் உறுத்துகிறது என்றால், அனைவருக்கும் பொதுவானவரான அம்பேத்கரின் பெயரை வைத்துவிடுங்கள்.
அனைத்து தொகுதிகளுக்கும் கலை, அறிவியல் கல்லூரி அமைக்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லிவிட்டு, ஏற்கெனவே செயல்பட்டு வரும் பல்கலைக்கழகத்தை செயல்படுத்த முடியவில்லை. உயர்கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்தவர் பொன்முடி. மதுரைகாமராஜர், பெரியார், திருவள்ளுவர் பல்கலைக் கழகங்களுக்கு ஒதுக்கும் நிதியைவிட அண்ணாமலை பல்கலைக் கழகத்திற்கு அரசு கூடுதலாக ரூ. 300 கோடி ஒதுக்கீடு செய் கிறது. ஆனால் ஜெயலலிதா பல்கலைக்கழகத்திற்கு ரூ. 100 கோடியை இந்த அரசால் ஒதுக்க முடியவில்லை என்று தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர்மோகன், எம்எல்ஏக்கள் சக்கரபாணி, அர்ஜூனன், செந்தில்குமார், முன்னாள் எம்எல்ஏ குமரகுரு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago