உப்புநீரை நன்னீராக்கும் திட்டங் களை கைவிட முயற்சி நடப்பதாகக் கூறி, அதைக் கண்டித்து 9 கிரா மங்களைச் சேர்ந்த மக்கள், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் ஆதாரம் இல்லாத கிராமங் களில் 25 ஆண்டுகளுக்கு முன்பு உப்புநீரை நன்னீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. தற்போது 9 கிராமங்களில் இத்திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதன் மூலம் 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் குடிநீர் வசதியை பெற்று வருகின்றன. இதில் 50-க்கும் மேற்பட்டவர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாகப் பணியாற்றி வருகின்றனர்.
காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் மாவட்டத்தில் முழு அளவில் செயல்பாட்டில் இல்லாத நிலையில் இந்த உப்புநீரை நன்னீராக்கும் திட்டங்களே அப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கின்றன. இந்நிலையில் உப்புநீரை நன்னீராக்கும் மையங்களை மூடி விட குடிநீர் வடிகால் வாரியம் முயற்சிப்பதாக தகவல் பரவியது. குடிநீர் திட்டத்தை முடக்கும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆட்சியர் அலுவலகத்தை குடிநீர் வடிகால் வாரிய தொழிலாளர்கள் (சிஐடியூ) சங்கம் சார்பில் முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. சிஐடியூ செயலாளர் எம்.சிவாஜி தலைமை வகித்தார். சிஐடியூ குடிநீர் வடிகால் வாரிய சங்கச் செயலாளர் எம்.மலைராஜன் முன்னிலை வகித்தார். இதில் 7 ஊராட்சித் தலைவர்கள், மக்கள் பங்கேற்றனர். அவர்களிடம் டி.எஸ்.பி. ராஜா உள்ளிட்டோர் பேச்சு நடத்தி போராட்டத்தை கைவிடச் செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago