2-ம் நிலை காவலர் பணிக்கு உடல் தகுதி தேர்வு :

By செய்திப்பிரிவு

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் கடந்த 2020-ம் ஆண்டில் நடத்திய காவல் துறை, சிறைத்துறை மற்றும்தீயணைப்புத்துறை 2-ம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வில் வெற்றிபெற்ற திருநெல்வேலி மாவட்டத்தைசேர்ந்த 3,437 ஆண்கள் மற்றும் 2,622பெண்களுக்கு உடல் தகுதி தேர்வு 7 நாட்கள் நடைபெறுகிறது.

சனி, ஞாயிறு தவிர்த்து மற்ற நாட்களில்இத் தேர்வில் பங்கேற்க தினமும்500 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் ஆண் களுக்கு நடைபெற்ற தேர்வில் உயரம், மார்பளவு சரிபார்த்தல் மற்றும் 1500 மீட்டர் ஓட்டம் போன்ற தேர்வுகள் நடைபெற்றன.

இதுபோல் பெண்களுக்கான தேர்வு தூய சவேரியார் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. கரோனா பரிசோதனை செய்து நெகடிவ் சான்றிதழ் பெற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இதையொட்டி டிஎஸ்பி மகேஸ்வரன் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டி ருந்தது

தூத்துக்குடி, கன்னியாகுமரி

இரண்டாம் நிலை காவலர் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற, தூத்துக்குடியைச் சேர்ந்த 1,662 பேர், கன்னியாகுமரியைச் சேர்ந்த 1,231 பேருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்கூறு தேர்வு தூத்துக்குடியில் நேற்று தொடங்கியது.

முதல் நாளான நேற்று 500 பேர் தேர்வுக்கு அழைக்கப் பட்டிருந்தனர். முதலில் சான்றிதழ்கள் சரி பார்க்கப்பட்டன. தொடர்ந்து, உயரம், மார்பளவு ஆகியவை கணக்கீடு செய்யப் பட்டன. பின்னர், 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது.

ரயில்வே டிஐஜி ஜெயகவுரி மேற்பார்வையில் தேர்வுகள் நடைபெற்றன. காவலர் பயிற்சி பள்ளி எஸ்பி ராஜராஜன், தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார் தலைமையிலான அதிகாரிகள் தேர்வை நடத்தினர்.

இத்தேர்வு வரும் 2-ம் தேதி வரை தொடர்ந்து நடைபெறுகிறது. இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், கயிறு ஏறுதல், 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டப்பந்தயம் போன்ற உடல்திறன் தேர்வுகள் ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்