அடவிநயினார் அணையில் 10 மி.மீ. மழை :

By செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மலையையொட்டிய பகுதிகள் மற்றும் பல இடங்களில் பரவலாக சாரல் மழை பெய்தது. தொடர் மழையால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது. குற்றாலம் அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

நேற்று முன்தினம் மழையின் தீவிரம் குறைந்தது. ஒரு சில இடங்களில் மட்டும்லேசான மழை பெய்தது. நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் அடவிநயினார் அணையில் 10 மி.மீ., குண்டாறு அணையில் 3, கடனாநதி அணையில் 2 மி.மீ. மழைபதிவானது.

நேற்று காலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. குளிர்ந்த காற்று வீசியது.

அடவிநயினார் அணை, குண்டாறு அணை ஆகியவை ஏற்கெனவே நிரம்பி விட்டதால் அணைகளுக்கு வரும் நீர் முழுவதும் உபரியாக வெளியேற்றப்படுகிறது. கடனாநதி அணை நீர்மட்டம் ஓரடி உயர்ந்து 75 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் ஒன்றேமுக்கால் அடி உயர்ந்து 73 அடியாகவும் இருந்தது.

நாகர்கோவில்

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்றுகாலையில் விட்டு விட்டு சாரல் பெய்தது.அதிகபட்சமாக கன்னிமாரில் 11 மிமீ மழைபதிவாகியிருந்தது. களியல், பெருஞ்சாணி, குளச்சல், மாம்பழத்துறையாறு, அடையாமடை, முள்ளங்கினாவிளையில் தலா 4 மிமீ, கோழிப்போர்விளை, குருந்தன்கோட்டில் தலா 5 மிமீ மழை பெய்திருந்தது.நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கும் 25 அடி கொள்ளளவு கொண்ட முக்கடல் அணையின் நீர்மட்டம் 24 அடியாக நேற்று உயர்ந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்