நாளை விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் :

By செய்திப்பிரிவு

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "திருப்பத்தூர் மாவட்டத்தில் மாதந்தோறும் நடைபெற்று வந்த விவசாயிகள் குறைதீர்வுக் கூட்டம் கடந்த சில மாதங்களாக கரோனா பரவல் கராணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை தொடர்ந்து, வட்டார அளவில், வேளாண் விரிவாக்க மையங்களில் விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று அதன் மீது தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஜூலை 28-ம் தேதி (நாளை) புதன்கிழமை திருப்பத்தூர் வட்டார வேளாண் விரிவாக்க மையம், கந்திலி ஒன்றியம் ஆதியூர் வட்டார வேளாண் விரிவாக்க மையம், ஜோலார்பேட்டை வட்டார வேளாண் விரிவாக்க மையம், நாட்றாம்பள்ளி வட்டார வேளாண் விரிவாக்க மையம், ஆலங்காயம் ஒன்றியம் வாணியம்பாடி வேளாண் விரிவாக்க மையம் மற்றும் மாதனூர் வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் காலை 10 மணிக்கு விவசாய குறைதீர்வுக்கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெறும்.

வட்டார அளவில் நடைபெறும் குறை தீர்வுக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு, தங்களது கோரிக்கை மற்றும் குறைகளை காணொலி காட்சி மூலம் ஆட்சியரிடம் தெரிவிக்கலாம். குறைதீர்வு முகாமில் கலந்து கொள்ள வரும் விவசாயிகள் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கூட்டத்தில் பங்கேற்கலாம்’’ என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்