அரக்கோணத்தில் நடைபெற்ற தொடர் கொலைகளின் எதிரொலி யாக அங்குள்ள ரவுடிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க கூடுதலாக தனிப்பிரிவு காவலர் களை நியமித்து காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா உத்தரவிட்டுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் தனிப்பிரிவு காவலர்களாக பணியாற்றி வரும் சிலர் 3 ஆண்டுகள் முதல் 9 ஆண்டுகள் வரை தொடர்ந்து ஒரே காவல் நிலையங்களில் பணியாற்றி வந்துள்ளனர்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டமாக இருந்தபோதில் இருந்தே இவர்கள் தனிப்பிரிவில் பணியாற்றி வருவதால் இடமாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா நேற்று உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, ரத்தினகிரி தனிப்பிரிவு காவலர் வினோத் குமார், ராணிப்பேட்டைக்கும், அங்கு பணியாற்றி வந்த தனிப்பிரிவு தலைமை காவலர் குமரேசன், சிப்காட்டுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
ஆற்காடு நகர தனிப்பிரிவு தலைமை காவலர் சுப்பிரமணி, ஆற்காடு கிராமியத்துக்கும், அங்கு ஏற்கெனவே பணியாற்றி வந்த தனிப்பிரிவு தலைமை காவலர் விநாயகமூர்த்தி ஆற்காடு நகரத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
ராணிப்பேட்டை தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் பாபு, ரத்தினகிரிக்கும், திமிரி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் காந்தி, அதே காவல் நிலையத்தின் தனிப்பிரிவுக்கும், கலவை காவல் நிலையத்தில் பணியாற்றும் தலைமை காவலர் ரகுராமன், வாழப்பந்தல் காவல் நிலைய தனிப்பிரிவுக்கும், அரக்கோணம் கிராமிய தனிப்பிரிவு காவலர் சிவகுமார், அரக்கோணம் நகர காவல் நிலைய தனிப்பிரிவுக்கும், அரக்கோணம் கிராமிய காவல் நிலைய தலைமை காவலர் மகேஷ், அதே காவல் நிலையத்தின் தனிப்பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
அதேபோல், அரக்கோணம் நகர காவல் நிலைய காவலர் ராஜேஷ், அரக்கோணம் நகர காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ரமேஷ் ஆகியோர் அரக்கோணம் நகரம் மற்றும் கிராமிய காவல் நிலைய எல்லையில் செயல்படும் ரவுடிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க கூடுதலாக தனிப்பிரிவுக்கு நியமித்து காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா உத்தரவிட்டுள்ளார்.
அரக்கோணத்தில் நடைபெற்ற தொடர் கொலைகளின் எதிரொலியாக ரவுடிகளின் செயல்பாடுகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க தனிப்பிரிவு காவலர்கள் நியமிக்கப் பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago