சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் :

By செய்திப்பிரிவு

பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து அரியலூர் செல்லும் சாலையில் வாகன போக்குவரத்து அதிகரிப்பு மற்றும் அதிக எண்ணிக்கையில் விபத்துகள் ஏற்பட்டதால், (தேசிய நெடுஞ்சாலை 226) கடந்த சில ஆண் டுகளாக சாலை விரிவுபடுத்தப் பட்டது. சாலை விரிவாக்க பணி முடிந்ததும் இந்த சாலையில் கடந்த ஆண்டு பேரளி அருகே சுங்கச் சாவடி அமைக்கப்பட்டது. இந்த சுங்கச் சாவடி அமைக்கும்போதே அப்பகுதி பொதுமக்கள், விவசா யிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த சாலையின் இருபுறமும், அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் முற்றிலும் விவசாய நிலங்கள் உள்ளன. இங்கு விளையும் விளை பொருட்களை விற்பனைக்காக எடுத்துச் செல்லவும், வயலுக்கு தேவையான விதை, உரம், இடுபொருட்கள் ஆகியவற்றை எடுத்து வரவும் இந்த சாலையை கடந்து செல்வது அவசியம். ஏற்கெ னவே எரிபொருள் விலையேற்றம், விளைபொருட்களுக்கு போதிய விலை கிடைக்காதது போன்றவற்றால் நஷ்டத்தை சந்தித்து வரும் விவசாயிகளுக்கு இந்த சுங்கச்சாவடியின் மூலம் கூடுதல் செலவு ஏற்படும் என்பதால், இப்பகுதி விவசாயிகள் சுங்கச் சாவடி அமைக்கும் திட்டத்தை கடுமையாக எதிர்த்து வந்தனர். இதனால் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை அமல்படுத்தப்படாமல் இருந்தது.

இந்நிலையில், பேரளி சுங்கச் சாவடியில் நேற்று முன்தினம் முதல் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி கட்டணம் வசூலிக்கப்பட்டது. இத னால் அப்பகுதி பொதுமக்கள், விவ சாயிகள் கடும் அதிருப்தியடைந் தனர்.

இதையடுத்து, பேரளி சுங்கச் சாவடி முன்பு நேற்று திரண்ட அப்பகுதி மக்கள் சுங்கச் சாவ டியை முற்றுகையிட்டு, சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த மரு வத்தூர் போலீஸார், அங்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, சுங்கச் சாவடியில் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை உடனடி யாக நிறுத்தப்பட்டது. இதனால், மறியலைக் கைவிட்டு அனை வரும் கலைந்து சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்