தமிழ்நாடு காவல்துறையில் 2013-ம் ஆண்டு பணியில் சேர்ந்த காவலர்களில் பெரும்பாலானவர் கள் ‘உதவிக்கரம்' என்ற பெயரில் வாட்ஸ் அப் குழுவாகவும், டெலி கிராம் குழுவாகவும் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
பொழுதுபோக்கு, தகவல் பரிமாற்றம் ஆகியவற்றையும் தாண்டி குழுவிலுள்ள யாரேனும் இறந்துவிட்டாலோ அல்லது விபத்துகளில் காயமடைந்தாலோ அவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவி செய்வதை கடந்த ஆண்டில் இருந்து வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில் அண்மையில் உயிர்நீத்த திருச்சியைச் சேர்ந்த ரஞ்சித்குமார், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த அன்பரசன் ஆகியோருக்கு நிதியுதவி செய்ய முடிவு செய்து, தங்களது வாட்ஸ் அப், டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவு செய்து, 2013-ல் பணிக்குச் சேர்ந்த சக காவலர்களிடமிருந்து நிதி திரட்டினர். அதன்மூலம் கிடைத்த தொகையில் ரஞ்சித்குமார் குடும்பத்துக்கு ரூ.17.50 லட்சம், அன்பரசன் குடும்பத்துக்கு ரூ.11.50 லட்சம் நிதி உதவியை நேற்று அவர்களின் வீடுகளுக்குச் சென்று வழங்கினர். மேலும் இறந் தவர்களின் நினைவாக வீட்டருகே மரக் கன்றுகளையும் நட்டனர்.
இதுகுறித்து உதவிக்கரம் வாட்ஸ் அப் குழுவிலுள்ள காவ லர்கள் கூறும்போது, ‘2020-ம் ஆண்டிலிருந்து தற்போது வரை எங்களது பேட்ஜில் உயிரிழந்த 27 பேர், விபத்தில் சிக்கிய 3 பேரின் குடும்பத்துக்கு நிதி உதவி அளித்துள்ளோம். எங்களுடன் பணிக்குச் சேர்ந்த அந்த காவலர்கள் மறைந்துவிட்ட நிலையில், நாங்கள் அளிக்கும் நிதி, அவர்களின் குடும்பத்தினர் வாழ்வாதாரத்துக்கு சிறிதளவே னும் உதவியாக இருக்கும் என நம்புகிறோம்' என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago