தென்காசி மாவட்டத்தில் சிஐடியு, விவசாய சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆகஸ்ட் மாதம் 9-ம் தேதி மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் தென்காசி சிஐடியு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.
விவசாய சங்க மாவட்டத் தலைவர் கணபதி தலைமை வகித்தார். விவசாய தொழிலாளர் சங்க மாநில துணைத் தலைவர் மலைவிளைபாசி சிறப்புரை யாற்றினார்.
சிஐடியு மாவட்டச் செயலாளர் வேல்முருகன், மாவட்டத் தலைவர் அயூப்கான், மாவட்ட நிர்வாகிகள் லெனின்குமார், வன்னியபெருமாள், மகாவிஷ்ணு, குருசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், தொழிலாளர் நலசட்டங்கள், 3 வேளாண் சட்டங்கள், மின்சார திருத்த சட்டங்கள், மோட்டார் வாகனச் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.
பெட்ரோல் ,டீசல், காஸ் விலை உயர்வு, வரிகளை குறைக்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசி மாவட்டத்தில் 200 இடங்களில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
ஆகஸ்ட் 9-ம் தேதி நடை பெறும் அகில இந்திய அளவிலான இயக்கத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் மனிதச்சங்கிலி போராட்டத்தை தென்காசி, சங்கரன்கோவிலில் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago