கல் ஏற்றிச் செல்லும் லாரிகளால் பொது மக்களுக்கு ஆபத்து : ஆட்சியரிடம் மதிமுக புகார் மனு

By செய்திப்பிரிவு

தென்காசி மாவட்ட மதிமுக செயலாளர் தி.மு.ராஜேந்திரன் ஆட்சியரிடம் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

தென்காசி மாவட்ட எல்லையையொட்டி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சொக்கநாதன்புத்தூர் பகுதியில் இயங்கும் தனியார் கல் குவாரியில் இருந்து கற்கள் உடைத்து எடுக்கப்பட்டு, தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம், வாசுதேவநல்லூர் சர்க்கரை ஆலைக்கு அருகில் உள்ள தலையணை செல்லும் சாலையில் குவாரி அமைத்து கற்களை உடைக்கும் பணி நடைபெறுகிறது.

இங்கு நாள்தோறும் 200 டாரஸ் லாரிகளில் சுமார் 1,200 யூனிட் கற்கள் கொண்டு வரப்படுவதாக தெரிகிறது.

கனரக வாகனங்களில் அளவுக்கு அதிகமாக கற்களை ஏற்றிக்கொண்டு வருவதால் கற்கள் கீழே விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. சாலை களில் பயணிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும், நடந்து செல்வோருக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு பின்னரும் இரவு நேரங்களில் பணிகள் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

முறையாக அனுமதி பெற்று இந்த குவாரி இயங்குகிறதா என்ற சந்தேகம் அப்பகுதி மக்களிடம் உள்ளது. எனவே, இதுகுறித்து ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்