உடையாமுத்தூர் ஊராட்சியில் - அடிப்படை வசதிகள் கேட்டு ஆட்சியரிடம் கோரிக்கை மனு :

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர் மாவட்டம் உடையாமுத்தூர் ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள், மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா விடம் கோரிக்கை மனு அளித்தனர்.

அம்மனுவில் கூறியிருப்ப தாவது, ‘‘உடையா முத்தூர் ஊராட்சியில் சமத்துவபுரம் மற்றும் மாங்குப்பம் பகுதியில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. எங்கள் பகுதியில் உள்ள சாலைகள் சேத மடைந்து குண்டும், குழியுமாக உள்ளன.

மழைக்காலங்களில் சாலை களில் மழைநீர் தேங்குவதால் அவதிக்குள்ளாகி வருகிறோம். கழிவுநீர் கால்வாய் வசதியும் இல்லை. கால்வாய்கள் தூர் வாரப்படாமல் உள்ளன. சுத்தமான குடிநீர் விநியோகம் இல்லை.

மேலும், மாங்குப்பம் மற்றும் சமத்துவபுரம் பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு அமைத்து தர வேண்டும். பொது மக்களுக்கு தேவையான அடிப் படை வசதிகளை செய்து தர வேண்டும்’’ என மனுவில் குறிப் பிட்டிருந்தனர்.

கோரிக்கை மனுவை பெற்ற ஆட்சியர் அமர் குஷ்வாஹா இது தொடர்பாக ஊராட்சி ஒன்றிய ஆணையர் மூலம் ஆய்வு செய்து, விரைவில் நடவடிக்கை எடுப் பதாக உறுதியளித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்