குறைந்த வாடகையில் வேளாண் கருவிகள் விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள அழைப்பு :

நாமக்கல் மாவட்ட வேளாண்மைப் பொறியியல் துறையில் 3 மண் தள்ளும் இயந்திரம், 6 டிராக்டர், 2 ஜேசிபி, 1 ஹிட்டாச்சி இயந்திரங்கள் உள்ளன. இதுபோல் டிராக்டரால் இயக்கக் கூடிய வைக்கோல் களைந்திடும் கருவி, சோளத்தட்டு அறுக்கும் கருவி, டிராக்டர் ட்ரெய்லர், வைக்கோல் கட்டும் கருவி, நிலக்கடலை, செடிபிடுங்கும் கருவி, கொத்து கலப்பை, இயந்திர நடவு கருவி, விதை நடும் கருவி, நிலக்கடலை பறித்தல் கருவி ஆகியவை வேளாண் பொறியியல் துறை மூலம் விவசாயிகளுக்கு வாடகைக்கு வழங்கப்பட்டு வருகிறது.

டிராக்டரால் இயக்கக்கூடிய அனைத்து கருவிகளுக்கும் டிராக்டருடன் 1 மணி நேரத்திற்கு ரூ.340, மண் தள்ளும் இயந்திரம் 1 மணி நேரத்திற்கு ரூ.840, பொக்லைன் 1 மணி நேரத்திற்கு ரூ.660, ஹிட்டாட்சி ரூ.1,440 என்ற குறைந்த வாடகை அடிப்படையில் விவசாயிகளுக்கு வாடகைக்கு வழங்கப்படுகிறது. இயந்திரங்களை வாடகைக்கு பெற வேளாண் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம், என. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE