பொன்னமராவதியில் 100 ஏக்கரில் தொழிற்பேட்டை : அமைச்சர் எஸ்.ரகுபதி தகவல்

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் அமைக் கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி நேற்று திறந்து வைத்தார்.

அப்போது அவர் பேசி யது: இளைஞர்கள் வேலை வாய்ப்பை பெறும் வகையில் சிட்கோ மூலம் 25 சதவீதம் மானியத்தில் சிறு தொழில் தொடங்கவும், வங்கிக் கடனுதவி பெறவும் நடவ டிக்கை எடுக்கப்படும்.

பொன்னமராவதியில் 100 ஏக்கரில் சிட்கோ மூலம் தொழிற்பேட்டை அமைக்கப் பட உள்ளது.

பொன்னமராவதி பேரூராட் சிக்கு அருகில் உள்ள பகுதி களை இணைத்து நகராட்சியாக தரம் உயர்த்தவும், பொன்ன மராவதியில் நீதிமன்றம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருச்சி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ந.விஸ்வநாதன், புதுக்கோட்டை மண்டல அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளர் இளங்கோவன், சுகாதார துணை இயக்குநர் கலைவாணி, பொன்னமராவதி ஒன்றியக்குழுத் தலைவர் சுதா அடைக்கலமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்