திருச்சி மாநகர் மாவட்ட சிஐடியு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகள் கூட்டம் நேற்று திருச்சியில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு சிஐடியு திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் எஸ்.ரங்கராஜன் தலைமை வகித்தார்.
கூட்டத்தில்,வேளாண்மை சட்டங்களை எதிர்த்து 8 மாதமாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவிமடுக்காத மத்திய அரசைக் கண்டித்தும், தொழிலாளர் நல சட்ட தொகுப்பை திரும்பப் பெற வலியுறுத்தியும், விவசாயத் தொழிலாளர்களின் நூறுநாள் வேலைத் திட்டத்துக்கு ஜாதி ரீதியாக கணக்கெடுப்பு நடத்துவதை கண்டித்தும் ஆக.9-ம் தேதி வெள்ளையனே வெளியேறு இயக்க தினத்தன்று காந்தி மார்க்கெட்டிலிருந்து பாலக்கரை வரை ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் மனித சங்கிலி போராட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் கே.முகமது அலி, விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநில பொருளாளர் சங்கர், மாவட்டச் செயலாளர்கள் கே.சி. பாண்டியன் (விவசாயிகள் சங்கம்), தங்கதுரை (விவசாயத் தொழிலாளர் சங்கம்) மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago