அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டத்தை அடுத்த குழவடை யான் கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக முதலை ஒன்று பகல் முழுவதும் குளத்திலும், இரவு நேரங்களில் விளைநிலங்களிலும் சுற்றி வந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் சற்று அச்சத்தில் இருந்தனர்.
தகவலறிந்த வனத்துறையினர் அப்பகுதியில் ஒரு நாள் முழுவதும் முகாமிட்டு முதலையை தேடியும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் நேற்று காலை விளைநிலங்களில் சுற்றி வந்த முதலையை கண்ட அப்பகுதி மக்கள், அதைப் பிடித்து வனத் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து, அந்த முதலையை வனத் துறையினர் அணைக்கரையில் உள்ள கொள்ளிடம் ஆற்றுக்கு கொண்டு சென்று விட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago