திருநெல்வேலி மனோன்மணி யம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் அர. மருதக்குட்டி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இப்பல்கலைக்கழக துறை களில் பயிற்றுவிக்கப்படும் அனை த்து பாடப்பிரிவுகளிலும் 2021-2022-ம் கல்வியாண்டில் சேர விண்ணப்பங்கள் இணை யதளம் வாயிலாக பெறப்பட்டு வருகிறது. விண்ணப்பிக்க கடைசிதேதி ஜூலை 31 ஆகும். முதுகலை பாடப்பிரிவு களில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு வரும் ஆக ஸ்ட் 12, 13-ம் தேதிகளில் இணையதளம் வாயிலாக நடைபெறும். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் இணையதளம் வாயிலாக அறிவிக்கப்படும். ஏனைய படிப்புகளுக்கான சேர்க்கை மாணவர்கள் சமர்ப்பித்துள்ள மதிப்பெண் பட்டியல் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு தேர்வுப்பட்டியல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
மற்ற விவரங்களை பல்கலைக்கழக தொலைபேசி எண் 0462-2333741 மூல மாகவோ அல்லது www.msuniv.ac.in என்ற இணைய தளம் மூலமாகவோ அறிந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago