நெல்லையில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் 2023 மார்ச்சில் நிறைவடையும் : நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு தகவல்

By செய்திப்பிரிவு

திருநெல்வேலியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் வரும் 2023-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நிறைவடையும் என்று தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவி த்தார்.

திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் மேற்கொள்ளப் பட்டுள்ள ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை அவர் நேற்று ஆய்வு செய்தார். மாநகரில் பல்வேறு பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 10 பேருந்து நிறுத்தங்கள் மற்றும் மாநகராட்சி அலுவலகத்தில் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறையை அவர் திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:

திருநெல்வேலி மாநகராட்சியில் 895.52 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் நடந்து வருகிறது. அதில் ரூ.161.3 கோடி மதிப்பில் 15 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மேலும் 56 பணிகள் 698.10 கோடியிலும், 5 பணிகள் ரூ.36.39 கோடியிலும் நடைபெறுகிறது.

திருநெல்வேலி மாநகரில் பாதாள சாக்கடை திட்டத்தில் 2-ம் கட்ட பணிகள் ரூ.296.11 கோடியிலும், 3-ம் கட்டப்பணிகள் ரூ.447.75 கோடியிலும் நடைபெற்று வருகிறது. இதில் 2-ம் கட்டப்பணிகள் 60 சதவீதம் முடிந்துள்ளது. 3-ம் கட்டப் பணிகள் தொடங்கப்பட்டு 2 ஆண்டுகள் ஆகியும் 10 சதவீதம் மட்டுமே நிறைவடைந்துள்ளது.

இத்திட்டப்பணிகளை ஒப்பந்தக் காரர் குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்கவில்லை என்றால், தி்டத்தை நிறைவேற்ற வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

மாநகர மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக ரூ.230 கோடியில் செயல்படுத்தப்படும் அரியநாயகிபுரம் குடிநீர் திட்டப்பணிகள் வரும் செப்டம்பர் மாதத்துக்குள் நிறைவடையும். மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தில் குடிநீர் வழங்குவதற்காக வழங்கப்படும் நிதியில் 65 சதவீதம் ஊரகப் பகுதிகளுக்கும், 35 சதவீதம் நகரப் பகுதிகளுக்கும் செலவிடப்படுகிறது. நகர்ப்புற பகுதிகளில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவது குறித்து மத்திய அரசு தெரிவிக்கும்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் 15 சிறந்த நகரங்களை உருவாக்குவோம் என்று திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அவை எந்தெந்த நகரங்கள் என்பதை தமிழக முதல்வர் முடிவு செய்து அறிவிப்பார் என்றார்.

திருநெல்வேலி மாநகராட்சியில் 895.52 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் நடந்து வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்