மத்திய அரசைக் கண்டித்துபல்வேறு கட்சிகள் போராட்டம் :

By செய்திப்பிரிவு

மனித உரிமைப் போராளி ஸ்டேன் சாமி நீதிமன்றக் காவலில் மரணமடைந்த விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் பல்வேறு கட்சிகள், அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் ப. அப்துல் சமது எம்எல்ஏ தலைமை வகித்தார். பாலபிரஜாபதி அடிகளார், ஜமாத்துல் உலமா சபை மாநிலத் தலைவர் பி.ஏ. காஜா மொய்னுதீன், பாளை யங்கோட்டை மறைமாவட்ட ஆயர் எஸ். அந்தோணிசாமி, திருச்சி சிஎஸ்ஐ பேராயர் த. சந்திரசேகரன், கல்வியாளர் அருட்தந்தை ஹென்றி ஜெரோம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக் பேசினார்.

மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன், மதிமுக மாவட்டச் செயலாளர் கே.எம்ஏ. நிஜாம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் கே.ஜி. பாஸ்கரன், மாவட்ட சிறுபான்மை நலக்குழு தலைவர் வி.பழனி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் காசி விஸ்வநாதன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளர் எல்.கே.எஸ். மீரான், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் சுரேஷ், எஸ்டிபிஐ மாவட்டச் செயலாளர் ஹயாத் முஹமது, பொருநை மக்கள் இயக்கத்தை சேர்ந்த நாறும்பூநாதன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்