மாவட்ட ஊராட்சி வார்டு வரையறை திருத்தம் கோரி மனு :

By செய்திப்பிரிவு

ராதாபுரம் மேற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் மி. ஜோசப் பெல்சி ஆட்சிய ருக்கு அனுப்பியுள்ள மனு:

ராதாபுரம் ஒன்றியம் மாவட்ட ஊராட்சி வார்டு எண் 9-ல் தெற்கு கள்ளிகுளம், சவுந்திரபாண்டியபுரம், சமூகரெங்கபுரம், கும்பிகுளம், ராதாபுரம், சிதம்பராபுரம், உதயத் தூர், பரமேஸ்வரபுரம், கூடங்குளம், விஜயாபதி ஆகிய 10 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த 10 ஊராட்சிகளும் சேர்ந்து ஒரு மாவட்ட ஊராட்சி வார்டாக உள்ளது.

வார்டு மறுவரையறையின்போது மாவட்ட ஊராட்சி வார்டு எண் 9-ல் நாங்குநேரி ஊராட்சி ஒன்றிய பகுதியில் உள்ள இட்டமொழி, அழகப்பபுரம், விஜயநாராய ணம், சங்கனாங்குளம் ஆகிய 4 கிராம ஊராட்சிகளை சேர்த்துள்ள தாக தெரிகிறது. இதனால் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் ஏற்படும். இந்த 4 ஊராட்சிகளையும் நீக்க வேண்டும். மேலும் மாவட்ட ஊராட்சி வார்டு எண் 9 தற்போது பொது பெண் வார்டாக மாற்றப்பட்டுள்ளது. இதை பொதுவார்டாக நீடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்