கரூர் மாவட்ட கிராமங்களில் - சைபர் கிளப் தொடங்க 500 இளைஞர்கள் தேர்வு : மத்திய மண்டல ஐ.ஜி தகவல்

By செய்திப்பிரிவு

கரூர் மாவட்ட கிராமங்களில் போலீஸ் சைபர் கிளப் தொடங்க 500 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய மண்டல ஐ.ஜி வி.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

கரூர் மாவட்ட காவல் துறை சார்பில் மணவாசியில் நேற்று நடைபெற்ற வேலைவாய்ப்பு ஆலோசனைக் கூட்டத்துக்கு திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி வி.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

இதில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பழனிசாமி, முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். எஸ்.பி ப.சுந்தரவடிவேல் வரவேற்றார். ஏடிஎஸ்பி வி.அசோக்குமார் நன்றி கூறினார்.

தொடர்ந்து, கரூர் வஉசி தெருவில் போதைப்பொருள் குற்றத்தடுப்பு செயல்பாடு குறித்து ஆய்வு மேற்கொண்ட ஐ.ஜி வி.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியது:

கரூர் மாவட்டத்தில் உள்ள 500 முக்கிய கிராமங்களில் போலீஸ் சைபர் கிளப் தொடங்க 500 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் கிராமங்களில் சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவார்கள்.

இதேபோல, மாவட்டத்தில் உள்ள 30 கல்லூரிகளிலும் சைபர் கிளப் தொடங்கப்படும். மேலும், குழந்தைத் திருமணங்களை தடுக்க 187 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்