நியாய விலைக்கடைகளில் தரமற்ற அரிசி விநியோகம் - நுகர்பொருள் வாணிப கிடங்கில் எம்எல்ஏ ஆய்வு :

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர் நுகர்பொருள் வாணிபக்கிடங்கில் சட்டப்பேரவை உறுப்பினர் நல்லதம்பி நேற்று ஆய்வு நடத்தினார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நியாய விலைக்கடைகளில் தரமற்ற அரிசி மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கப்படுவதாக சட்டப்பேரவை உறுப்பினர் நல்ல தம்பிக்கு பொது மக்கள் புகார் அளித்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜவ்வாதுமலை புலியூர் பகுதியில் உள்ள நியாய விலைக் கடையில் தரமற்ற அரிசி வழங்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து, திருப் பத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் நல்லதம்பி, குனிச்சி கிராமத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, அங்கிருந்த பொதுமக்கள் பல்வேறு குற்றச்சாட்டு களை சட்டப்பேரவை உறுப்பின ரிடம் தெரிவித்தனர். .

இதுகுறித்து, மாவட்ட வழங்கல் அதிகாரிக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கப் பட்டது. இதைத்தொடர்ந்து, நுகர் பொருள் வாணிபக் கிடங்கில் அரிசி, பருப்பு, பாமாயில், சர்க்கரை, உள்ளிட்ட மூட்டைகளை ஆய்வு செய்தார்.

அதன்பிறகு, அரிசி உள்ளிட்ட வைகள் தமிழக அரசு தரமான அரிசி அனுப்பினால் ஏன் நீங்கள் தரமற்ற அரிசியை பொதுமக்களுக்கு வழங்குகிறீர்கள் என கேட்டறிந்தார். இது போன்று தவறுகள் செய்தால் அதிகாரிகள் மீது துறை ரீதியாக மாவட்ட ஆட்சியருக்கு புகார் அனுப்பி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

இதுகுறித்து செய்தியாளர் களிடம் எம்எல்ஏ நல்லதம்பி கூறியதாவது, ‘‘பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய உணவுப் பொருட்களை அரசு இலவசமாக அனுப்பினாலும் ஊழியர்கள் அதில் கலப்படம் செய்து மக்களுக்கு அனுப்புகின்றனர்.

இந்த கிடங்கில் ஆய்வு செய்யும்போது சிசிடிவி கேமராக்கள் செயலிழந்து கிடக்கின்றன. அதேபோல அலுவலக வளாகத்தில் குப்பைக் கழிவுகள் குவிந்துள்ளன. இதனை சீர்படுத்த உத்தரவிட்டுள்ளேன்.

மேலும், முறைகேடுகளில் ஈடுபட்டு வருவோர்களுக்கு எச்சரிக்கை விடப்படுகிறது. அடுத்த முறை ஆய்வின்போது அனைத்தும் சரி செய்யாவிட்டால், அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்