அரசின் ‘நீட்’ தேர்வு பயிற்சி வகுப்பில் பங்கேற்க - வேலூர் மாவட்டத்தில் 1,100 மாணவ-மாணவிகள் முன்பதிவு : பயிற்சி அளிக்க தயார் நிலையில் ஆசிரியர்கள்

By செய்திப்பிரிவு

வேலூர் மாவட்டத்தில் அரசின் ‘நீட்’ தேர்வு பயிற்சி மையங்களில் பங்கேற்க 1,100 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் வரும் 2-ம் தேதி தொடங்க உள்ளதாக கூறப் படுகிறது.

தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வில் வெற்றிபெறுவதற்காக அரசுப் பள்ளி மாணவர்களுக்காக 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங் கப்பட்டுள்ளது. இதன்மூலம் அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர சுலபமான வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான படிப்பில் சிறந்த மாணவர்களை தேர்வு செய்து பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் ஒவ் வொரு ஒன்றியத்திலும் ‘நீட்’ தேர்வுக்கான பயிற்சி மையம் அமைக்க ஏற்பாடுகளை செய்துள் ளனர். இதில், வேலூர் அரசு முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் ‘நீட்’ தேர்வு சந்தேகங்களை விளக்குவதற்கான சிறப்பு மையம் ஏற்படுத்தியுள்ளனர். இங்கு ‘நீட்’ தேர்வு தொடர்பான சந்தே கங்களை விளக்குவதற்காக 4 பாட ஆசிரியர்கள் நியமிக்கப்பட் டுள்ளனர். மேலும், அணைக்கட்டு ஒன்றியத்தில் ஊசூர் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கணியம்பாடி ஒன்றியத்தில் பென் னாத்தூர் அரசினர் மேல்நிலைப் பள்ளி, வேலூர் ஒன்றியத்தில் விரிஞ்சிபுரம் அரசினர் மேல்நிலைப் பள்ளி, காட்பாடி ஒன்றியத்தில் காங் கேயநல்லூர் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கே.வி.குப்பம் ஒன்றியத்தில் லத்தேரி அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, குடியாத்தம் ஒன்றியத்தில் மேல்பட்டி அரசினர் மேல்நிலைப் பள்ளி, பேரணாம்பட்டு ஒன்றியத்தில் மாச்சம்பட்டு அரசினர் மேல்நிலைப் பள்ளிகளில் ‘நீட்’ தேர்வுக்கான பயிற்சி மையங்கள் ஏற்படுத்த தயாராக உள்ளனர்.

இதுதவிர ஆங்கில வழிக் கல்வி படிக்கும் மாணவ-மாணவி களுக்காக வேலூர் வெங்க டேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில் ‘நீட்’ தேர்வு பயிற்சி மையங்களை ஏற்படுத்தியுள்ளனர். இங்கு அரசு அறிவித்ததும் பயிற்சிகள் அளிக்க ஆசிரியர்களும் தயார் நிலையில் உள்ளனர்.

இதற்கிடையில், அரசு சார்பில் நடைபெற உள்ள ‘நீட்’ தேர்வு பயிற்சி மையத்தில் பங்கேற்க விருப்பம் உள்ள மாணவர்கள் முன்பதிவு செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை நிலவரப்படி 1,100 மாணவ, மாணவிகள் முன்பதிவு செய்துள்ளனர். வரும் 6-ம் தேதி வரை முன்பதிவு நடைபெறும் என்பதால் கூடுதல் எண்ணிக்கை யிலான மாணவர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரம், அரசின் ‘நீட்’ தேர்வுக்கான பயிற்சி மையங்கள் வரும் ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் தொடங்க அதிக வாய்ப்புள்ளதாக கல்வித்துறை உயர் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்