அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் :

By செய்திப்பிரிவு

மத்திய அரசை கண்டித்து திருப்பத்தூர், தி.மலையில் அனைத்து தொழிற் சங்க கூட்டமைப்பு சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

திருப்பத்தூரில் நடந்த ஆர்ப்பாட் டத்துக்கு ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் வேணுகோபால், எல்பிஎப் தலைவர் தேவராஜ், டிடிஎஸ்எப் பொதுச்செயலாளர் தண்டபாணி ஆகியோர் தலைமை வகித்தனர். சிஐடியு கூட்டமைப்பு தலைவர் ரங்கன், ஏஐடியுசி தலைவர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், அத்தியாவசிய பாது காப்பு சேவை அவசர சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். பாதுகாப்புத்துறை உற்பத்தியை தனியார் கையில் ஒப்படைப்பதை நிறுத்த வேண்டும். மின்சார திருத்த சட்டம், மோட்டார் வாகன சட்டம் ஆகியவற்றை கைவிட வேண்டும். ரயில்வே, மின்சாரம், சுரங்கங்கள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் காப்பீடு நிதி நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் எண்ணத்தை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

இதில், சிபிஐ மாவட்டச் செயலாளர் சாமிக்கண்ணு, வட்டச் செயலாளர் ஜாபர்சாதிக், காங் கிரஸ் மாவட்டத் தலைவர் பிரபு உட்பட பலர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்க மிட்டனர்.

திருவண்ணாமலை

அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் திருவண்ணா மலை அண்ணா சிலை முன்பு நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தொமுச செயலாளர் சவுந்தரராஜன் தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில், அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும் மத்திய அரசின் சட்டங்கள் மற்றும் திட்டங்களுக்கு எதிராக முழக்கமிடப்பட்டது. தொமுச மாவட்டத் தலைவர் நாகராஜன், மண்டலத் தலைவர் துரைசாமி, சிஐடியு மாவட்டத் தலைவர் காங்கேயன், மாவட்டத் துணை செயலாளர் வீரபத்திரன், ஏஐடியுசி மாவட்டத் தலைவர் முத்தையன், மாவட்டத் துணை செயலாளர் தங்கராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்