விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பது:
இந்திய அரசின் சார்பில் பல்வேறு நிகழ்வுகளான நீரில் மூழ்கியவரை காப்பாறுதல், மின்சார விபத்துகள், தீ வீபத்து கள்,நிலச்சரிவு, விலங்கின தாக்கு தல், சுரங்க மீட்பு நடவடிக்கைகள் ஆகியவற்றில் ஈடுபட்டு மனித உயிர்களை மீட்பவர்களுக்கு ‘ஜீவன் ரஷா’ பதக்க விருது வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி 2021-ம் ஆண்டுக் கான ‘ஜீவன் ரஷா’ பதக்க விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான விண்ணப்பம் மற்றும் முக்கிய விவரங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணைய தள முகவரியான "www.sdat.tn.gov.in"-ல் பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்து விண்ணப்பங்களை ஆகஸ்ட் 2-ம் தேதிக்குள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரிடம் நேரில் சமர்ப்பித்திட வேண்டும். இதுதொடர்பான இதர விவரங்களை மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரிலோ அல்லது 7401703485 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago