பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினர் - விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை :

By செய்திப்பிரிவு

ரூ.20 லட்சம் நிவாரணம் கோரி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினர், விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

சாத்தூர் அருகே அச்சங் குளத்தில் உள்ள பட்டாசு ஆலையில் கடந்த பிப்ரவரி 12-ம் தேதி நடந்த வெடிவிபத்தில் 27 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

உயிரிழந்தோர் குடும்பத்துக்கு நிவாரணத் தொகையாக மத்திய அரசு ரூ.2 லட்சமும், தமிழக அரசு ரூ.3 லட்சமும் அறிவித்தது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நிவாரணத் தொகை யை உயர்த்தி வழங்கக்கோரி தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் முறையிட்டனர். இதையடுத்து உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சமும், காயமடைந்த தொழிலாளர்களுக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரையும் வழங்க வேண்டும் என்று பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து உயிரி ழந்தோரின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்த தொழிலாளர்கள் நேற்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இது தொடர்பாக ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்