தேனி மாவட்ட காற்றாலைகளில்மின் உற்பத்தி அதிகரிப்பு :

தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி, போடி, தேவாரம், கண்டமனூர் உள்ளிட்ட பகுதிகளில் 515 காற்றாலைகள் உள்ளன. இதில் தற்போது 420 இயக்கத்தில் உள்ளன. கடந்த மாதம் வரை காற்று வீசுவது குறைவாக இருந்ததால் தினமும் சராசரியாக 120 முதல் 150 மெகாவாட் வரை மின் உற்பத்தி இருந்தது. தற்போது தென்மேற்கு பருவ க்காற்றின் வீச்சு அதிகரித்துள்ளது. இதனால் நேற்று காற்றாலை மின் உற்பத்தி 395 மெகாவாட்டாக அதிகரித்தது. நீர்மின் உற்பத்தியை பொறுத்தளவில் லோயர்கேம்ப்பில் 168 மெகாவாட்டும், குறுவனூத்து, காஞ்சிமரத்துறை, வெட்டுக்காடு, கேஜிபட்டி சிறு நீர்மின் உற்பத்தி மையங்களில் 16 மெகாவாட்டும் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த ஆண்டு மழை மற்றும் காற்றின் வீச்சும் அதிகமாக உள்ளதால் மின்உற்பத்தி அதிகரித்துள்ளது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE