குழந்தைகளுக்கு நியுமோகோக்கல் தடுப்பூசி தென்காசியில் இன்று தொடக்கம் :

குழந்தைகளை அதிகம் பாதிப் படையச் செய்யும் நியுமோகோக்கல் நிமோனியா பாக்டீரியாவால் ஏற்படும் தொற்று நோயில் இருந்து அவர்களை காக்கும் பொருட்டு, தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் நியுமோகோக்கல் கான்ஜீகேட் தடுப்பூசி செலுத்தும் திட்டம் தென்காசி மாவட்டத்தில் இன்று (23-ம் தேதி) தொடங்குகிறது.

இத்தடுப்பூசி குழந்தை பிறந்த ஒன்றரை மாதத்திலும், மூன்றரை மாதத்திலும் மற்றும் ஊக்கத் தவணையாக 9-வது மாதத்திலும் குழந்தைகளுக்கு அளிக்கப்பட உள்ளது. மூன்று தவணை நியுமோ கோக்கல் கான்ஜுகேட் தடுப்பூசியின் விலை தனியாரிடம் ரூ.12,000 ஆக இருக்கும் நிலையில், தமிழக அரசு இதனை இலவசமாக வழங்குகிறது.

இத்தடுப்பூசி அனைத்து அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் புதன்கிழமைதோறும் வழங்கப்படும். பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுக்கு நியுமோகோக்கல் தடுப்பூசியை செலுத்தி பயன்பெற வேண்டும் என, ஆட்சியர் கோபால சுந்தரராஜ் தெரிவித்துள்ளார்.

அனைத்து அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் புதன்கிழமைதோறும் குழந்தைகளுக்கு நியுமோகோக்கல் தடுப்பூசியை செலுத்தி பயன்பெற வேண்டும்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்