தமிழக அரசின் 25 சதவீத மானியத்துடன் தொழில் கடனுதவி திட்டத்துக்காக திருப்பத்தூர் மாவட் டத்தைச் சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கின்றன என ஆட்சியர் அமர் குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில், "திருப்பத் தூர் மாவட்டத்தில் பொருளாதார அடிப்படையில் நலிவுற்ற வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்கள் சொந்தமாக தொழில் தொடங்க மாநில அரசின் 25 சதவீதம் மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் உதவிவழங்கும் திட்டம் (UYEGP) திருப்பத் தூர் மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டம் மூலம், 18 வயது முதல் 35 வயதுள்ளவர்கள் மற்றும் இளம்பெண்கள் பயன்பெறலாம். ஆதிதிராவிடர், பழங்குடியினர், பின்தங்கிய வகுப்பினர், மிகவும் பின்தங்கிய வகுப்பினர், சிறுபான்மையினர், மகளிர், முன்னாள் படைவீரர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் ஆகியோருக்கு வயது வரம்பு 45 -ஆக தளர்த்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு குறையாமல் வசிப்பவராக இருக்க வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி தொழில்களுக்கு அதிகபட்ச முதலீட்டு தொகையாக ரூ.15 லட்சமும், சேவை மற்றும் வியாபாரத் தொழில்களுக்கு அதிகபட்ச முதலீட்டு தொகையாக ரூ.5 லட்சமும் கடன் உதவியாக பெறலாம். இக்கடன் தொகைக்கு 25 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.2.50 லட்சம் மானியமாக பெறலாம்.
இத்திட்டம் மூலம் கடனுதவி பெறுவோர் ஜவுளி வியாபாரம், பலசரக்கு, வியாபாரம் சார்ந்த தொழில்கள், டெய்லரிங், செல்போன் சர்வீஸ், ஜெராக்ஸ், அழகு நிலையங்கள், பயணிகள் ஆட்டோ, பேக்கரி மற்றும் இனிப்பகம், கயிறு தயாரித்தல், கடலை மிட்டாய் தயாரிப்பு, மரச்செக்கு ஆயில், ஊறுகாய், ஜாம் தயாரித்தல், ஊதுபத்தி மற்றும் கணினி சாம்பிராணி தயாரித்தல், தேநீர் கடை, உணவகம், அரிசி வியாபாரம், பினாயில் தயாரித்தல், அப்பளம் தயாரித்தல், தோல் பொருட்கள், டைல்ஸ் கடை, ஆயத்த ஆடைகள் தயாரிப்பு, ஸ்டீல் கட்டில் பீரோ மற்றும் அதைச் சார்ந்த தொழில்கள் தொடங்கலாம்.
கரோனா தொற்று காரணமாக ‘ஆன்லைன்’ மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதி யுள்ள விண்ணப்பங்கள் நேர்முகத் தேர்வின் நேரடியாக வங்கிக்கு பரிந்துரை செய்யப்படும். நடப்பு நிதியாண்டில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் உள்ள பயனாளிகளை தேர்வு செய்து அவர்களின் விண்ணப்பங்கள் வங்கிக்கு பரிந்துரைக்கப்படவுள்ளன.
எனவே, திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த தொழில் தொடங்க ஆர்வமுள்ள இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் உடனடியாக www.msmeonline.tn.gov.in/uyegp என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
இது குறித்து மேலும் விவரம் தேவைப்படுவோர்கள் எண்:86/5, எழில் நகர், திருப்பத்தூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் நேரிலும் அல்லது 04179-299099 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிந்துக்கொள்ளலாம்’’ என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago