கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களின் கல்லூரிகளை - அண்ணாமலை பல்கலையில் இணைக்க ஆசிரியர்கள் கூட்டமைப்பு வரவேற்பு :

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர். மயிலாடுதுறை மாவட்டங்களின் கல்லூரிகளை அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் இணைக்க ஆசிரியர்கள் கூட்டமைப்பு வரவேற்பு தெரிவித் துள்ளது.

இதுகுறித்து இக்கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சிவகுருநாதன் நேற்று செய்தியா ளர்களிடம் கூறியது:

இந்தியாவின் இரண்டாவது உண்டுஉறைவிடப் பல்கலைக் கழகம் என்றபாரம்பரியம் கொண்ட 93 ஆண்டுகள் பழமை வாய்ந்த அண்ணாமலை பல் கலைக் கழகத்தை ஒருமைப் பல்கலை என்ற நிலையிலிருந்து இணைவு பல்கலையாக மாற்ற வேண்டும் என்பதுஆசிரியர்கள் கூட்டமைப்பின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வந்தது.

பல்கலைக் கழக நிதிச் சிக்கல்களை தீர்க்க 2013- ம் ஆண்டு அப்போதைய தமிழக அரசால் 2015- ல் பல்கலை நிர்வாகியாக ஷிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டார். இப்பல்கலையின் நிதி சிக்கல்களைத் தீர்க்க 5 தீர்வுகளில் ஒரு தீர்வாக, அருகாமையில் உள்ள மாவட்டக் கல்லூரிகளை அண்ணாமலை பல்கலையோடு இணைத்து இதனை இணைவுப் பல்கலைக்கழகமாக மாற்ற வேண்டும் என அரசுக்கு பரிந்துரை செய்தி ருந்தார்.

தற்போது தமிழக அரசு மேற் கண்ட பரிந்துரையை ஏற்று விழுப்புரம்,கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் மயிலா டுதுறை ஆகிய மாவட்டங்களின் கல்லூரிகளை அண்ணாமலை பல்கலைக் கழகத்தோடு இணைக்க கொள்கை முடிவு எடுத்து அறிவித் துள்ளது. இதை வரவேற்கிறோம். தமிழக முதல்வர், உயர் கல்வித் துறை அமைச்சர் மற்றும் உயர்கல்வித் துறை முதன்மை செயலாளர் ஆகியோருக்கு பல்கலைக் கழக ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்