கடமலை ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவியை கைப்பற்ற திமுக முயற்சி :

By செய்திப்பிரிவு

தேனி மாவட்டம், கடமலை ஒன்றியத் தலைவர் பதவியைக் கைப்பற்ற திமுக வினர் முயற்சி செய்து வருகின்றனர்.

கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள 14 வார்டுகளில் அதிமுக, திமுக தலா 7 இடங்களைக் கைப்பற்றி இருந்தது.

இந்நிலையில் திமுக கவுன்சிலர் தமிழ்ச்செல்வன் அதிமுகவில் இணைந் தார். இதனால் அதிமுக கவுன்சிலர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது.

இதனையடுத்து அதிமுக கவுன்சிலர் சந்திரா சந்தோசம் கடமலை-மயிலை ஒன்றியக்குழு தலைவராக தேர்ந்தெடுக் கப்பட்டார்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு தமிழ்ச்செல்வன் தற்கொலை செய்து கொண்டதால் அதிமுக கவுன்சிலர்கள் எண்ணிக்கை 7 ஆக குறைந்தது. மேலும் அதிமுக கவுன் சிலர்கள் சேகர், சிலம்பரசன் ஆகியோர் அடுத்தடுத்து திமுகவில் இணைந்தனர்.

நம்பிக்கை இல்லா தீர்மானம்

இதன்மூலம் அதிமுக பெரும்பான் மையை இழந்ததால் தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர திமுக கவுன்சிலர்கள் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

இதுகுறித்து தேனி திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கம்பம் ராமகி ருஷ்ணன், ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் ஆகியோர் கூறுகையில், புதிய ஒன்றியக் குழு தலைவர் பதவியை திமுக கைப்பற்றும் என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்