கரூர் நகராட்சிக்கு தினமும் காவிரி குடிநீர் : அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி

கரூர் நகராட்சி பகுதிக்கு வாங்கல் காவிரி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்ய அமைக்கப்பட்டுள்ள பழைய குழாய்களை மாற்றி புதிய குடிநீர் குழாய்கள் அமைப்பது தொடர்பாக, வாங்கல் தலைமை நீரேற்று நிலையத் தில் மாநில மின் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, ஆட்சியர் த.பிரபு சங்கர் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.

பின்னர், அமைச்சர் வி.செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியது:

கரூர் நகராட்சியில் ரூ.68 கோடியில் நடைபெற்று வரும் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளை போர்க்கால அடிப்படையில் முடித்து, விரைவில் மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஏற்கெனவே உள்ள குடிநீர் திட்டத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட குழாய்களை மாற்றி அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற் கொள்வதற்காக, ரூ.25 கோடி திட்ட மதிப் பீடு தயார் செய்யப்பட்டு, சிறப்பு நிதி மூலம் அப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

கரூர் நகராட்சியில் அனைத்து வார்டுகளிலும், நாள்தோறும் காலை 5 மணி முதல் 8 மணிவரை குடிநீர் விநியோகிப்பதையே அரசின் இலக் காகக் கொண்டு நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது என்றார்.

ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் எம்.லியாகத், கரூர் கோட் டாட்சியர் என்.எஸ்.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தொடர்ந்து, கரூர் நகராட்சி காமராஜர் மார்க்கெட், புதுக்குளத்துப்பாளையம் மீன் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்த அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, பின்னர் கூறியது:

காமராஜர் மார்க்கெட் பகுதியில் குளிர் சாதன கிடங்கு வசதியுடன் கூடிய புதிய காய்கறி வணிக வளாகம், புதுக்குளத்துப் பாளையம் மீன் மார்க்கெட்டில் புதிய விற்பனைக்கூடங்கள், சுங்கவாயில் பகுதியில் நவீன குளிர்பதனக் கிடங் குடன் கூடிய புதிய இறைச்சிக்கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE