நாட்றாம்பள்ளி அடுத்த - அழிஞ்சிகுளம் ஊராட்சிக்கு ரூ.10 லட்சம் பரிசு : திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா வழங்கினார்

By செய்திப்பிரிவு

நாட்றாம்பள்ளி அடுத்த அழிஞ்சி குளம் ஊராட்சியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்திக்கொள்ள பரிசுத் தொகையாக ரூ.10 லட்சத்துக்கான காசோலையை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ் வாஹா நேற்று வழங்கினார்.

ஆண்டு தோறும் தீண்டாமையை கடை பிடிக்காமல், மத நல்லிணக்கத்துடன் செயல்படும் ஊராட்சி களுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.10 லட்சம் பரிசு தொகை வழங்கப்படுகிறது. அதனடிப் படையில், திருப்பத்தூர் மாவட் டம் நாட்றாம்பள்ளி ஒன்றியத்துக்கு உட்பட்ட அழிஞ்சிகுளம் ஊராட்சி யில் தீண்டாமை கடைபிடிக்காமல் மத நல்லிணக் கத்துடன் செயல் படக்கூடிய கிராம ஊராட்சியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, அந்த ஊராட்சியில் அடிப்படை வசதி களை மேம்படுத்திக்கொள்ள பரிசுத்தொகையாக ரூ.10 லட்சத்துக்கான காசோலையை, மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா ஊராட்சி அலுவ லரிடம் வழங்கினார்.

அப்போது, ஆட்சியர் பேசும்போது, ‘‘தீண்டாமையை கடைபிடிக்காத ஊராட்சியை தேர்வு செய்யும் குழுவில் மாவட்ட ஆட்சியர் தலைவராகவும், டிஆர்ஓ, திட்ட அலுவலர், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், மாவட்ட பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். தீண்டாமையை கடைபிடிக்காத ஊராட்சியாக தேர்வு செய்யப்படும் ஊராட்சிக்கு பரிசுத்தொகையாக ரூ.10 லட்சம் தமிழக அரசு சார்பில் வழங்கப்படுகிறது.

இந்த தொகையை பயன்படுத்தி அந்த ஊராட்சியில் குடிநீர் வசதி, சாலை வசதி, பள்ளிக்கட்டிடம் சீர் செய்தல், பள்ளி மற்றும் குழந்தை நல மையம் கட்டிடம் கட்டுதல், கால்நடை தண்ணீர் தொட்டி கட்டுதல், மின்விளக்கு அமைத்தல் போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொள்ளலாம்.மேலும், மக்களுக்கு தேவை யான, பயன்தரக்கூடிய எந்த வளர்ச்சி பணியை செய்வது என சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகமே முடிவு செய்து கொள்ளலாம்’’ என்றார்.

இந்நிகழ்ச்சியில், திருப்பத்தூர் திட்ட இயக்குநர் மகேஷ்பாபு, ஆதிதிராவிடர் நல அலுவலர் பூங்கொடி, நாட்றாம்பள்ளி பிடிஓ ரகு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்