ரேஷன் கடைகளில் வெளி ஆட்களை அனுமதித்தால் குற்றவி யல் நடவடிக்கை எடுக்கப்படும் என விற்பனையாளர்களை கூட் டுறவுத் துறை எச்சரித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி உள்ளிட்ட சில இடங்களில் ரேஷன் கடைகள் வெளி ஆட்களின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், பொருட்கள் முறையாக வழங்குவதில்லை என வும் அடிக்கடி புகார்கள் எழுந் தன. மாநிலம் முழுவதும் இதே புகார்கள் உள்ளன.
இந்நிலையில், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் சண் முகசுந்தரம் மண்டல இணைப் பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூயிருப்பதாவது:
சில ரேஷன் கடைகளில் விற்பனையாளர்கள், கட்டுநர் களைத் தவிர வெளி ஆட்கள் இருப்பதாகத் தொடர்ந்து புகார்கள் வருகின்றன.
இதைத் தவிர்க்க வேண்டும். ஒரே கடையில் தொடர்ந்து பணிபு ரிந்தால், அவருக்கு நெருக் கமானோர் கடைகளுக்கு வந்து அட்டைதாரர்களுக்கு தொல்லை கொடுக்க வாய்ப்புள்ளது. அத னால் ஒருவரை ஒரே கடையில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிய அனுமதிக்கக் கூடாது.
ஊழியர்களைத் தவிர வெளி ஆட்கள் கடையில் இருக்க அனுமதிக்கக் கூடாது. வெளி ஆட்கள் இருந்தால் காவல்துறை மூலம் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் வெளி ஆட்களை அனுமதிக்கும் ரேஷன்கடை ஊழியர்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரி வித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago