பெரம்பலூர் அருகே பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறை கேடு நடந்ததாக எழுந்த புகாரை யடுத்து, ஆலத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் கொட்டரை கிராமத்தில் பிரதம மந்திரியின் வீடுகட்டும் திட்டத்தின் கீழ் 4 பேர் வீடு கட்டாமல் அரசு நிதி ரூ.4.2 லட்சத்தைப் பெற்று முறைகேடு செய்திருப்பதும், இதற்கு அரசு அலுவலர்கள் பலர் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் அண்மையில் விசா ரணை மேற்கொண்டு ஆலத்தூர் ஒன்றிய மேற்பார்வையாளர்கள் ஜெய்சங்கர், மதீனா, இளநிலை பொறியாளர் ராஜபாபு, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சங்கரன், ஜூலி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஆலயமணி, ஊராட்சி செயலர் சகுந்தலா ஆகிய 7 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில் நேற்று ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சோதனையிட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார், முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். மேலும், பணியாளர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago