கரூர் அருகேயுள்ள புத்தாம்பூ ரில் உள்ள கரூர் ஜவுளிப்பூங்கா வில், தொழில்முனைவோர் மற் றும் நெசவாளர்களுக்கான ஆலோ சனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமையில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்தில் மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பேசியது:
கரூர் வரும் ஜவுளி கொள் முதலாளர்கள் விமானநிலை யங்களில் இருந்து 2 மணி நேரத்துக்கு மேல் பயணம் செய்யவேண்டும் என்பதால் இங்கு வர யோசிக்கின்றனர். எனவே, கரூரில் விமானநிலையம் அமைக்க சிறப்பு கவனம் செலுத்தப்படும்.
வெளிநாடுகளில் நடத்தப் படுவதுபோல கரூரிலும் ஜவுளி கண்காட்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்றார்.
கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பேசும்போது, ‘‘கரூரில் சாயப் பூங்கா (டையிங் பார்க்) விரைவில் அமைக்கப்படும்’’ என்றார்.
கூட்டத்தில், கைத்தறி மற்றும் துணிநூல்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான பீலா ராஜேஷ், கரூர் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர் சங்கத்தலைவர் நாச்சிமுத்து, எம்எல்ஏக்கள் இரா.மாணிக்கம், பி.ஆர்.இளங்கோ, சிவகாமசுந்தரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago