திருச்சியில் நேற்று மாநில வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தியிடம், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் வெ.கோவிந்தராஜூலு அளித்த மனுவில் குறிப்பிட்டுள்ளது:
ஜிஎஸ்டிஆர்என் வடிவமைக்கப்பட்ட வலைதளத்தை பயன்படுத்துவதில் வணிகர்களுக்கு உள்ள பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். வாங்குவோர், விற்பவரிடையே பிரச்சினைகள் இருக்கும்போது 180 நாட்களுக்குள் விற்பவர் வரி செலுத்தாவிட்டால், வாங்கியவர் வரி செலுத்த வேண்டும் என ஜிஎஸ்டி விதி சொல்வதில் இயற்கை நீதி மறுக்கப்பட்டுள்ளது. வரி செலுத்துவோர் எண்ணிக்கை 1.5 கோடியைத் தாண்டிவிட்ட நிலையில், வலைதளத்தின் திறனை அதிகரிக்கும் வகையில், போர்ட்டல் வடிவமைப்பை மறு ஆய்வு செய்து, திருத்தி அமைக்க வேண்டும்.
மாதாந்திர தாக்கல் படிவங்கள் சமர்ப்பிக்கும் கடைசிநாள் அரசு விடுமுறையாக இருந்தால் 2 நாட்கள் கூடுதல் அவகாசம் அளித்து, ரிட்டன் தாக்கல் செய்வதை எளிமைப்படுத்த வேண்டும்.
வாட் வரி முடிவுக்கு வந்த பிறகும், வணிகர்கள் மீது பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டு, வணிகர்களை சிரமத்துக்கு உள்ளாக்குவதைத் தடுக்கும் வகையில், வாட் சமாதானத் திட்டத்தை அறிவித்து, வழக்குகளை விரைந்து முடித்து, அரசுக்கு ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பை சரிசெய்ய வேண்டும்.
தன்னிச்சையான காலதாமத கட்டணம், அபராதம், வட்டி விதிப்பு போன்றவற்றை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். ஒற்றை கேஷ் லெட்ஜர் முறை அமல்படுத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தெரிவிக்கப்பட்டிருந்தன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago