தொழிற்சங்கங்கள் சார்பில் தென்காசியில் ஜூலை 23-ல் ஆர்ப்பாட்டம் :

By செய்திப்பிரிவு

தென்காசி மாவட்ட தொழிற்சங்கங்கள், விவசாய மற்றும் விவசாய தொழிலாளர் சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்றது. சிஐடியு மாவட்டச் செயலாளர் வேல்முருகன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் அயூப்கான், விவசாய சங்க மாவட்டத் தலைவர் கணபதி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் பால்சாமி, ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளர் சுப்பையா, மாவட்டத் தலைவர் சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிக்கும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு வழங்கக் கூடாது. தொழிலாளர் உரிமைகளுக்கு எதிரான நடவடிக்கைகளை கைவிட வேண்டும். வருமான வரி செலுத்தாத அனைத்து தொழிலாளர்களுக்கும் கரோனா நிவாரண நிதி ரூ.7500, குடும்பத்தில் நபர் ஒருவருக்கு 10 கிலோ உணவு தானியங்கள் வழங்க வேண்டும். விவசாயிகள், தொழிலாளர்களுக்கு பாதகமான சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை குறைக்க வேண்டும். ரயில்வே , வங்கி, எல்ஐசி, தொலைத்தொடர்பு, விமானம், துறைமுகம் உள்ளிட்ட துறைகளை தனி யாருக்கு தாரைவார்க்கக் கூடாது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 23-ம் தேதி இந்தியா முழுவதும் தொழிற்சங்கங்கள் , விவசாய மற்றும் விவசாய தொழிலாளர் சங்கங்கள் சார்பில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அன்று காலை 10 மணிக்கு தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்