அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.9 லட்சம் மோசடி செய்தவர் கைது :

By செய்திப்பிரிவு

திட்டக்குடி அருகே உள்ள கொட்டாரம் கிராமத்தை சேர்ந்த செல் வராஜ்(63) என்பவர் கடந்த ஏப்ரல் 15-ம் தேதி கடலூர் எஸ்பியிடம் ஒரு மனு அளித்தார். அம்மனுவில், "எனது மகள் அனிதா பிஎஸ்சி நர்சிங் படித்துள்ளார். அவருக்கு சுகாதாரத் துறையில் வேலை வாங்கி தருவதாக சென்னை ஊரப்பாக்கத்தை சேர்ந்த உலகநாதன், வடபழனியில் உள்ள சசிப்பிரியா ஆகியோர் தெரிவித்தனர். இதற்காக உலகநாதனிடம் ரூ. 2லட்சத்து 85 ஆயிரம் கொடுத்துள்ளேன். இருவரும் ஏமாற்றிவிட்டனர்" என்று கூறியிருந் தார். இது போல பேர்பெரியாங் குப்பத்தை சேர்ந்த சிகாமணி என்பவரிடம் அவரது மகனுக்கு மின்துறையில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 5 லட்சமும், விருத்தாசலம் தெற்கு பெரியார் நகரை சேர்ந்த அரசு என்பவரிடம் அவரது மகனுக்கு வேலை வாங்கி தருவதாக ஒன்றரை லட்சம் ரூபாயும் உலகநாதன் மோசடி செய்துள்ளதாக எஸ்பியிடம் புகார் செய்தனர். மாவட்ட குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் விக்ரமன் இதுதொடர்பாக உலகநாதன், சசிப்பிரியா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தார்.

இந்நிலையில் எஸ்பி சக்திகணேசன் உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் அன்பழகன், சிறப்பு உதவி ஆய்வாளர் குமார், தலைமைக்காவலர் சுப்ரமணியன், பெண்காவலர் சிவசங்கரி ஆகியோர் கொண்ட தனிப்படையினர் சென்னை சைதாப் பேட்டையில் உலகநாதனை நேற்றுமுன்தினம் கைது செய்து கடலூர் அழைத்து வந்தனர். பின்னர் நேற்று கடலூர் சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சசிப்பிரியாவை தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்