திருச்சி மாநகராட்சி கோ-அபிஷே கபுரம் கோட்டத்துக்குட்பட்ட 54-வது வார்டில் 4 இடங்களில் ஆழ்துளைக் கிணறுகளுடன் கூடிய குடிநீர்த் தொட்டிகள் மக்கள் பயன்பாட்டுக்கு நேற்று திறந்து வைக்கப்பட்டன.
மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு உத்தரவின்பேரில், மாநகராட்சி 54-வது வார்டு வடக்கு புது பாய்க்காரத் தெருவில் மாநகராட்சி நிதி ரூ.2.50 லட்சம், புத்தூர் அக்ரஹாரம் பகுதியில் வடக்கு முத்துராஜா தெரு, குளத்து மேடு, களத்து மேடு ஆகிய இடங்களில் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி தலா ரூ.3 லட்சம் என 4 இடங்களிலும் மொத்தம் ரூ.11.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளுடன் கூடிய குடிநீர்த் தொட்டிகளை அமைச்சர் கே.என்.நேரு நேற்று திறந்துவைத்தார்.
தொடர்ந்து, அந்தப் பகுதி மக் களிடம் அமைச்சர் கே.என்.நேரு குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது, அவர்கள் வலியுறுத்திய சாலை, குடிநீர், வீடு, வீட்டுமனைப் பட்டா, வடிகால், தெரு விளக்கு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாநகராட்சி அலுவலர்களுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.
ஆட்சியர் சு.சிவராசு, மாநக ராட்சி ஆணையர் ப.மு.நெ.முஜிபுர் ரகுமான், நகரப் பொறியாளர் எஸ்.அமுதவல்லி, செயற்பொறியாளர் குமரேசன், கோ-அபிஷேகபுரம் கோட்ட உதவி ஆணையர் வினோத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago