புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனி வார்டில் மனநலம் குன்றியோருக்கு சிகிச்சை அளிக்கப்படும் என மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதியில் நேற்று பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பின்னர், அறந்தாங்கியில் செய்தியாளர் களிடம் கூறியது:
தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் உள்ள குளங்களை பாதுகாக்கும் வகையில் கழிவுநீரை சுத்திகரித்து அனுப்ப தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு அறிவித்துள்ள மாநில அளவிலான பசுமைக் குழு, புதுக்கோட்டை மாவட்டத் துக்கு ஜூலை 23, 24-ம் தேதிகளில் வரவுள்ளது. இக்குழு, மாவட்டத்தில் யூக்கலிப்டஸ் மரங்களை அகற்றிவிட்டு பிற மரக்கன்றுகளை நடுதல் போன்ற பணிகளை மேற்கொள்வதற்கான ஆலோசனையில் ஈடுபட உள் ளது.
அறந்தாங்கியில் விரைவில் புதைசாக்கடைத் திட்டத்துக்கான பணிகள் தொடங்கும். புதுக் கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மனநலம் குன்றியோரை பொது வார்டில் சேர்த்து, சிகிச்சை அளிப்பதை தவிர்த்து, பிரத்யேக வசதியுள்ள தனி வார்டில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்படும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago