ரஷ்யா விண்வெளி பயிற்சிக்கான முதல் தேர்வில் தேர்ச்சியடைந்த - அரசுப் பள்ளி மாணவிகளுக்கு எம்எல்ஏ பாராட்டு :

By செய்திப்பிரிவு

அரியலூர் மாவட்டம் திருமானூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்1 படித்து வரும் மாணவிகள் ரகசியா, வேதா. திருமானூரைச் சேர்ந்த இரு மாணவிகளின் அறிவியல் ஆர்வத்தை அறிந்த பள்ளித் தலைமை ஆசிரியை இன்பராணி, சென்னையைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தின் சார்பில் 2021-ம் ஆண்டுக்கான உலக அளவிலான வானவியல் ஆராய்ச்சி தொடர்பான பயிற்சி படிப்புக்கு மாணவிகளை விண்ணப்பிக்க அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, வானவியல் ஆராய்ச்சி தொடர்பான புத்தகங் களை மாணவிகளுக்கு வாங்கி கொடுத்து, படிக்க ஊக்கப்படுத் தினார். ரஷ்யாவில் நடத்தப்படும் விண்வெளி பயிற்சிக்கான மாணவர்கள் தேர்வுக்கு ஆன் லைன் மூலம் 7 கட்டமாக எழுத்து தேர்வுகள் நடைபெறும் நிலையில், அண்மையில் நடைபெற்ற முதல்கட்ட எழுத்து தேர்வை தமிழகத்தை சேர்ந்த 2,000 மாணவ, மாணவிகள் எழுதினர்.

இதில், முதல் 10 இடத்துக்குள் அரியலூர் மாவட்டம் திருமானூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி கள் ரகசியா, வேதா ஆகியோர் இடம் பெற்றனர்.

இதற்கிடையே சென்னையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி யில், பள்ளிக்கல்வித் துறை அமைச் சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, மாணவிகள் ரகசியா, வேதா உட்பட 10 மாணவ, மாண விகளை அழைத்து பாராட்டி, கேடயம் வழங்கி வாழ்த்தினார்.

இந்த மாணவிகள் அடுத்து நடைபெறும் 6 கட்ட தேர்வில் பங்கேற்று, முதல் 5 இடத்துக்குள் வந்தால், அவர்கள் பிப்ரவரி மாதம் ரஷ்யாவில் நடைபெறும் விண்வெளி பயிற்சியில் பங்கேற்று படிக்கலாம்.

இதற்காக கடும் பயிற்சியில் மாணவிகள் இருவரும் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து தேர்வுகளிலும் வெற்றிபெற்று பயிற்சி வகுப்பில் தேர்வாகி, நாசாவில் பணியாற்றுவோம் என மாணவிகள் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அரியலூர் எம்எல்ஏ அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், மாண விகள் ரகசியா, வேதா ஆகியோ ருக்கு கேடயம் மற்றும் ஊக்கத் தொகையை எம்எல்ஏ கு.சின்னப்பா வழங்கி, பாராட்டினார்.

பள்ளித் தலைமையாசிரியை இன்பராணி, ஊராட்சித் தலைவர் உத்திராபதி, ஒன்றியக் குழுத் தலை வர் சுமதிஅசோகசக்கரவர்த்தி உள் ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்