இலவச வீட்டுமனை பெற்ற 760 பேரின் பட்டா ரத்து :

By செய்திப்பிரிவு

ஜெகதாபியில் வழங்கப்பட்ட இலவச வீட்டுமனையில் வீடு கட்டி குடியேறாத 760 பேரின் வீட்டுமனைப் பட்டாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து கரூர் ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளது:

கரூர் மாவட்டம் ஜெகதாபியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை மூலம் 1997-ம் ஆண்டு 250 பேருக்கும், 1998-ம் ஆண்டில் 510 பேருக்கும் வீட்டுமனைப் பட்டா வழங்கப் பட்டது. ஆனால், மனைப்பட்டா பெற்ற அனைத்து பயனாளிகளும் 20 ஆண்டுகள் கடந்தும் அங்கு வீடுகட்டி குடியேறவில்லை.

வீட்டுமனை வழங்கப்பட்ட 6 மாத காலத்துக்குள் வீடுகட்டி குடியேற வேண்டும் எனவும், அவ்வாறு குடியேறாத நிலையில் வழங்கப்பட்ட வீட்டுமனைப் பட் டாக்கள் ரத்து செய்யப்படும் என்றும் வருவாய்த் துறை விதி உள்ளது.

எனவே, ஜெகதாபியில் வழங் கப்பட்ட வீட்டுமனைகளில் வீடு கட்டப்படாத காரணத்தால், அரசு விதிமுறைகளின்படி வழங்கப்பட்ட வீட்டுமனைப் பட்டாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

வீட்டுமனை பெற்ற பயனா ளிகள் இவ்வறிவிப்புக்கு ஆட்சே பணை தெரிவிக்க விரும் பினால் 15 நாட்களுக்குள் கரூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் தெரிவித்துக் கொள்ளலாம். அதன் பிறகு வரும் ஆட்சேபணைகள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்