சட்ட விரோத செயல்களில் ஈடுபடு வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் எச்சரித்துள்ளார்.
தென்காசி மாவட்டத்தில் தொடர் குற்றச் செயல்கள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, தென்காசி, பகுதியைச் சேர்ந்த முகமது அலி (31), பாதுஷா (41), கார்த்திக் (24), கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த முகம்மது மைதீன், ஆய்க்குடியைச் சேர்ந்த பாண்டியராஜ் ஆகிய 5 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
மேலும், கடந்த சில நாட்களில் பல்வேறு குற்றச் செயல்களில் தொடர்புடைய 117 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தென்காசி மாவட்டத்தில் குற்றச் செயல்களைத் தடுக்க ரோந்துப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சட்டவிரோத செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago